ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தினுள் பிரவேசித்து இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி

mahinda_rajapaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன் முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்து இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மிக இளம் பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளங்குகின்றார்.

ஆறு சகோதரர்களையும், மூன்று சகோதரிகளையும் உள்ளடக்கிய குடும்பத்தில் இரண்டாவது புதல்வராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். இவர் காலி ரிச்மண்ட், கொழும்பு நாலந்தா, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் கற்று சட்டக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.

றுஹணுவின் சிங்கம் டி.எம்.ராஜபக்ஷ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னோடி டி.ஏ. ராஜபக்ஷ ஆகியோரின் அடிச்சுவடுகளில் பயணிக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருந்து நாட்டுக்கு ஏற்கனவே அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

Related Posts