வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஏசுவதாக நினைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏசிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.
கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தர தாமதமாகியதால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, ஜனாதிபதியை ஆதரித்து உரையாற்றுகையில், ‘போர் முடிவடைந்ததும் இரண்டு மடங்கு இராணுவத்தினரை படையில் இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் இராணுவ முகாம் அமைக்கவேண்டும் என அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்தவர், அத்துடன், சிங்களவரை அண்டித்தான் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர் மஹிந்த ராஜபக்ஷ … என்று கூறிவிட்டு, மன்னிக்கவேண்டும் என்று சமாளித்து சரத் பொன்சேகா என்று கூறினார்.
இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.