ஜனாதிபதி பொலிவியாவில் இலங்கையின் உண்மை நிலையை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.

77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியாவின் சாந்தா குருஸ் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாநாடு நடைபெற்ற எக்ஸ்போ குருஸ் ஏற்றுமதி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சில நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது இலங்கையின் உண்மை நிலையை அவர்களுக்கு விளக்கினார்.

President Mahinda Rajapaksa

கெபோன் பிரதமர் டெனியல் ஒனா ஒன்டோ (Daniel Ona Ondo), உருகுவே ஜனாதிபதி
ஜொசே முஜிக்கா (José Mujica) இக்டோரியல் கினி ஜனாதிபதி டியடோரா ஒபியேங் நியுமா இம்பசாகோ (Teodoro Obiang Nguema Mbasogo) ஆகியோரை சந்தித்தார்.

நாட்டை பிளவுப்படுத்துவதற்காக பயங்கரவாத போராட்டத்தில் ஈடுபட்ட எல்ரீரீஈ. இயக்கம் அரசியல் தலைவர்கள், சிவில் பிரசைகள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரைப் படுகொலை செய்தும் பொதுச் சொத்துக்களை அழித்தும் மேற்கொண்ட சேதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.

பயங்கரவாதிகள் இலங்கை ஜனாதிபதி ஒருவரை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரை அனைத்து தமிழ் ஜனநாயக தலைவர்களை மற்றும் அனைத்து இனங்களையும் சேர்ந்த சிவில் பிரசைகளையும் படுகொலை செய்தனர்.

குழந்தைகளைக்கூட அவர்கள் கொன்றனர். சொத்துச் சேதங்கள் அளப்பரியது எனவும் அவர் கூறினார்.

ஓவ்வொரு அரசாங்கமும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு தேட முயற்சித்தது எனவும் தமது அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்காக ஜெனிவாவுக்கும் ஒஸ்லோ நகரத்திற்கும் சென்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆயினும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதத்தை கைவிடவில்லை. ஆகவே, யுத்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தை தனது அரசு தோற்கடித்தது என ஜனாதிபதி வெளிநாட்டு தலைவர்களுக்கு எடுத்துக்கூறினார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நமது நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்தோம். இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றினோம். சுமார் 12,000 போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். முன்னாள் சிறுவர் போராளிகள் அனைவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தோம். யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்பொழுது 7.5% மாகும் வடக்கில் அது 22% மாகும் என ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பவை உள்ளிட்ட தேசிய நல்லிணக்கத்திற்கான
ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார்.

இத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும் புற சக்திகள் மனித உரிமைகள்
குற்றச்சாட்டுக்களை முன் வைத்து நாட்டை மீண்டும் நிலைகுலையச் செய்ய முயற்சி
எடுக்கின்றன என ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Related Posts