மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
மரண வீடு ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் ஒன்றை இவர்கள் பயணித்த டிபென்டர் முந்திச் செல்ல முற்பட்ட வேளை, டிபென்டர் மீது இரு பஸ்கள் மோதியதாகவும் இதில் டிபென்டர் கடுமையான சேதத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் அந்த இடத்திலேயே பலியாகினர் எனவும் ஏனைய இருவர் பின்னர் உயிரிழந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.