ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (08) இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமய நிகழ்ச்சிகள் மற்றும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறவுள்ளன. இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.