ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதுவரை இயற்கை அனர்த்தங்களினால் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சுமார் 7 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள், தேர்தல் கடமைகளை பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுடன் கண்டியில் நடைபெறவுள்ள கலந்துரையாடலையடுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts