ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வீதிகள் மூடப்படும்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 2015 ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை யாழ். நகரப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்யலங்கார, திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.

polic-raventheraa-vaiththeyalankara

காந்தி வீதி, 1ஆம் குறுக்குத்தெரு, வேம்படி வீதி, நீதிமன்ற வீதி, சுப்பிரமணிய பூங்கா வீதி, புல்லுக்குளம் சந்தியில் இருந்து வேம்படி வீதி வரை உள்ள வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆஸ்பத்திரி வீதி, பிரதான வீதி, 2ஆம் குறுக்குத்தெரு ஆகிய வீதிகளை மக்கள் மாற்றுவழியாக பயன்படுத்தலாம்.

அவசர தேவைகள் இருப்பின் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் டபிள்யூ.பி.விமலசேனவிடம் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts