ஜனாதிபதி தேர்தலுக்கு யாழ். மாவட்டம் தயார் நிலையில்!

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் முகமாக தேர்தலை நாளை நடத்துவதற்காக இன்று (15) நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு இணைவாக இன்று காலை முதல் மதியம் வரை நாடளாவிய ரீதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களும் காணப்படுகின்றன.

எனவே, யாழ். மாவட்டத்தில் 631 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றது.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிகளில் 475,176 பேரும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 89,538 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts