ஜனாதிபதி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 19 வேட்பு மனுக்களும் ஏற்பு!

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.

mahintha-thesappireya

இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 அரசியல்கட்சிகளும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேவேளை இந்த வேட்பு மனுக்கள் குறித்து விக்கிரமபாகு கருணாரத்ன மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுக்கெதிராகவும் நாத் அமரகோன் மைத்திரிபால சிறிசேனவின் வேட்பு மனுக்கெதிராகவும் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனைகள் தேர்தல்கள் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.

உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கென வருகை தந்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரம் வருமாறு

01.பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – ஜனசெத பெரமுன
02.திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ – ஒக்கொம ரஜவரு அமைப்பு
03.திரு. பாணி விஜேசிறிவர்தன – சோசலிச சமத்துவக் கட்சி
04.திரு. சிறிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிச கட்சி
05திரு. ராஜபக்ஷ பேர்சி மஹேந்திர – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
06.திரு. ஜயந்த குலதுங்க – எக்ஸத் லங்கா மகா சபா கட்சி
07.திரு. விமல் கீகனகே – இலங்கை தேசிய முன்னணி
08.திரு. பள்ளேவத்தே கமராலலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன – புதிய ஜனநாயக முன்னணி
09.திரு. இப்றாஹிம் நிஸ்தார் மொஹமட் மிப்லார் – ஐக்கிய சமாதான முன்னணி
10.திரு. துமிந்த நாகமுவ – முன்னிலை சோஷலிஸ கட்சி
11.திரு. ஏ.எஸ்.பீ. லியனகே – ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி
12.திரு. சுந்தரம் மகேந்திரன் – நவ சம சமாஜக் கட்சி
13.திரு. கட்டுகம்பல அப்புகாமிலாகெ பிரசன்ன பிரியங்கர- ஜனநாயக தேசிய இயக்கம்
14.திரு. ராஜபக்ஷ ஆரச்சிலாகே நாமல் அஜித் ராஜபக்ஷ – எமது தேசிய முன்னணி
15.திரு. ரத்நாயக ஆரச்சிகே சிறிசேன – தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
16.திரு. சரத் மனமேந்திர – நவ சிஹல உறுமய
17.திரு. ருவன்திலக்க பேதுரு ஆரச்சி – எக்சத் லங்கா பொதுஜன கட்சி
18.திரு.ஐ.எம்.இல்யாஸ் -சுயேட்சை
19.திரு. பொல்கம்பல ராளலாகே சமிந்த அநுருத்த பொல்கம்பல – சுயேட்சை

Related Posts