ஜனாதிபதி தலைமையில் நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டது

மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்கும் நிகழ்வு நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவ கலாநிதி நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச ஆகியோர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதற்கமைய ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இம்மருத்துவமனை அரச மருத்துவமனையாக செயற்படுமென ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதனா மருத்துவமனைக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனையானது, 3.5 பில்லியன் ரூபா பெறுமதியானதாகும்.

ஐந்து ஏக்கர் பரப்பில் பசுமை எண்ணக்கருவிற்கமைய கட்டப்பட்டுள்ள நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை 180,600 சதுர அடி பரப்புடைய நான்கு மாடிக் கட்டிடத்தையும், எட்டு மாடிகளைக் கொண்ட இரு கட்டிடங்களையும் கொண்டமைந்துள்ளது.

Related Posts