ஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்!

யாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­வ­டக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிக்­க­வுள்­ள­துடன் வலி­வ­டக்கில் மேல­தி­க­மாக 460ஏக்கர் காணி­க­ளையும் பொது­மக்­க­ளிடம் மீள வழங்கவுள்ளார்.

கடந்த 26வரு­டங்­க­ளுக்கு முன்னர் வலி­வ­டக்கு பகு­தியில் இருந்து குடா­நாட்டில் அப்­போது காணப்­பட்ட அசா­தா­ரண நில­மை­யினால் மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லிக நலன்­புரி முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தங்­கி­யி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில் குறித்த மக்­களின் காணி­க­ளா­னது நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து பகுதி பகு­தி­யாக இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து மீளவும் உரிய மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படு வருகின்றது.

இதன்­படி இடம்­பெ­யர்ந்த மக்­களில் காணி­யற்ற மக்­க­ளுக்­காக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் நிதி­யுத­வியின் கீழ் காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லைக்கு சொந்­த­மான காணியில் இரா­ணு­வத்தால் வீடுகள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த வீடு­களை கடந்த முறை ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு கைய­ளிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அது சில கார­ணங்­களால் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே இன்று யாழ்.விஜயம் செய்யும் ஜனா­தி­பதி குறித்த 100 வீடு­களை உரிய மக்­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் இந்த நிகழ்­வுக்கு எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­மந்தன் மீள்­கு­டி­யேற்ற இந்­து­மத சிறைச்­சா­லைகள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­ணேஸ்­வரன் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செய­லாளர் வேலா­யுதம் சிவ­ஞா­ன­சோதி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­ய­ாராச்சி மற்றும் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்ளிட்டோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றைய தினம் வலி­வ­டக்கில் இரா­ணு­வத்­திடம் உள்ள பொது­மக்­க­ளது காணி­களில் மேலும் 460ஏக்கர் காணி­களை மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­க­வுள்ளதாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செய­லாளர் வேலா­யுதம் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி தையிட்டி தெற்கு வடக்கு கிழக்கு ஆகிய பகு­தி­களில் இருந்தும் மயிலிட்டியில் குறிக்கப்பட்ட சில பகுதிகளையும் காங்கேசன்துறை தெற்கில் குறிக்கப்பட சில பகுதிகளையும் காங்கேசன்துறை மத்தியில் சில பகுதிகளையும் இன்றைய தினம் ஜனாதிபதி பொதுமக்களிடம் மீள கையளிக்கவுள்ளாதக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts