பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.
அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் நேற்று இடம்பெற இருந்த சாட்சி விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளுக்காக ஆஜராகியுள்ளார்.