ஆண்டுகாலமாக தீர்வின்றி போராடிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி சந்திப்பின் போது, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 30ஆம் திகதி வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்கங்கங்களின் எட்டு மாவட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களை ஜனாதிபதியை சந்திக்க அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.