2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே, தெரிகிறது என, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஏற்றுக் கொள்வதாகவும், இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் தான் கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜித் ரோஹன விஜயமுனி எனும் ஜோதிடர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவர் ஜனாதிபதி ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் உயிரிழக்கலாம் என தெரிவித்தாக, சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரவின.
இது குறித்து நேற்றய ஊடகவியலாளர் சந்திப்பில் வினவப்பட்ட போதே நிமல் போபகே மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.