ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு – சங்கா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது.

இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்காக பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு சங்கக்காரவை கௌரவித்த ஜனாதிபதி “இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகிறோம்.. எனினும் அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை..” எனக் குறிப்பிட்டார்.

Farewell Song – A Tribute to Sangakkara

Related Posts