ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன.

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன. மேலும் பொலன்னறுவை கல்விஹாரையின் ரன்கொத் விஹாரையின் முன்னால் மற்றுமொரு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெறுகிறது.

இதேவேளை, பழுகஸ்கமனவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் விசேட ஆராதனையும், மன்னம்பிடியவிலுள்ள இந்துக் கோயிலில் விசேட பூஜை ஆராதனைகளும் கதுருவெல ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts