வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல விதமான காரணங்களை கூறி தடையாகவுள்ளனர்.
குறிப்பாக மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதில் கூட முன்னர் நடந்ததாக கூறப்படும் காரணத்தை இராணுவம் கூறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும் இராணுவமே இடம்கொடுக்க மறுக்கிறது என நான் நம்புகின்றேன்.
எனவே இவ் விடயத்தில் மக்களுடைய எதிர்கால வாழ்க்கையை கருத்திலெடுத்து மக்கள் தலைவர்களும் இராணுவமும் போதிய கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு இதற்கு ஒர் முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் தமது மனோநிலையை எடுத்துகாட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதில் பல விதமான சிக்கல்கள் உள்ளன. எனவே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.