ஜனாதிபதியின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி!

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி.

mangalaramaya-1

ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்புக்கு பயணம் செய்து மட்டக்களப்பு விமானநிலையத்தைத் திறந்துவைத்தார்.

மட்டக்களப்புக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவை மட்டக்களப்பு விகாரைக்கு வருமாறு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அழைப்பு விடுத்தார்.

இதற்கு அதிபர் மைத்திரிபாலசிறிசேன தனக்கு நேரமில்லையெனத் தெரிவித்து அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விகாராதிபதி தனது விகாரையில் ஏற்கனவே ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட நினைவுக்கல்லை அடித்து நொருக்கியுள்ளார்.

mangalaramaya-2

Related Posts