ஜனாதிபதியின் ‘சால்வையை’ ‘கழுத்துப்பட்டி’ என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.

mahinth ramposha

தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர்.

அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர்.

அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது.

அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழுவிலிருந்த பிரதிநிதியொருவர் அவசரமாக டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

அதில், ‘ரமபோச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது….. அவர், மிக அவசரத்தில்தான் இருக்கின்றார். தனது கழுத்துப்பட்டியை (Tie) கூட கட்டுவதற்கு அவர் மறந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts