யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, குறித்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். இதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் குறித்த பட்டதாரிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.