ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில்
கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts