ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹக் செய்த இருவருக்கு பிணை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இந்த உத்தரவை பிறப்பித்தார்.

27 வயது இளைஞன், 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

மற்றைய மாணவன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

Related Posts