நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .
இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவை கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.