ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.ஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, உதய கம்பன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த இருவரும் அண்மைக்காலமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை நேரடியாகவே விமர்சித்திருந்தனர். குறிப்பாக ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை விமர்சித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.