ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.