2014 ஜனவரி 1ம் திகதி முதல் கடலுக்கு மீன்படி தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு அங்கி அணிவது மற்றும் காப்புறுதி பெறுவது கட்டாயம் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது குடும்பத்தாரின் எதிர்காலம் என்பவற்றை கருத்திற் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் இன்று பாராளுமன்றில தெரிவித்தார்.