ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்குகின்றோம்.
நான் யாருடனும் எதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றது.
அதேபோல ஹெல உறுமய மற்றுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது. மற்றுமொரு தரப்பு இன்னுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது.
எனினும், என்னுடன் இருக்கும் சகோதரர்கள் இந்த நாட்டின் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து என்னுடைய பயணத்திற்கு கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பதனை நான் இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.