ஜனவரியில் 8 நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை கொழும்பிலுள்ள 43 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts