ஜனவரியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

ஆறாவது முறையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் யாழில் நடைபெறவுள்ளது.

ஜனவரி மாதம் 23,24 மற்றும் 25 ஆம் திகதிகளில் யாழ்.மாநகரசபை திறந்தவெளி மைதானத்தில்இடம்பெறவுள்ளது.

இதில் 250 க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் வெளியிலிரந்து 180 நிறுவனங்களும் இதில் பங்குபற்றவுள்ளதுடன் அனைத்து துறைகள் தொடர்பான பொருட்களும் காட்சிக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

Related Posts