ஜனநாயக மரபுகளை காப்பாற்ற சிவஞானம் பதவி விலக வேண்டும்: சுரேஷ்

வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனநாயக மரபுகளைகாப்பாற்றி பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவைத்தலைவருக்கு அரசியல்ரீதியான மரபுகளும், நடைமுறைகளும் நிச்சயம் தெரிந்திருக்கும். வடக்கு மாகாணசபை பிழையான விடயங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க கூடாது என சுட்டிக்காட்டினார்.

பொது மக்களும் அவர் பதவி விலகுவதைத்தான் விரும்புகின்றார்கள், அவர் இது தொடர்பில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts