நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் உத்தரவை மீறிச் செயற்படும் வியாபார நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.