எதிர்வரும் மாதம் 11, 12 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறையாற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுகளில் 4,000 ஆயிரம் பக்தர்கள் இவ் ஆலயத்திற்கு வருகைதந்துள்ளதாகவும் இந்த ஆண்டு 5,000 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலிருந்தும் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக யாழ் மாவட்ட செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் 30 நீர்தாங்கிகள் உடைய பவுசர்களினால் அவர்களுக்கான குடிநீர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படும், 92 மலசல கூட வசதிகளுக்கான அமைப்புகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் 25 அரச, அரசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் இங்கு கடமைக்காக பொறுப்பேற்க உள்ளதாகவும் அதற்காக சலக ஒழுங்குகளையும் அவர்கள் மேற்கொள்ளுவார்கள்.
மேலும் பக்தர்களின் நலன் கருதிக்கொண்டு 50 சிற்றுண்டி சாலைகளும் அமைக்கப்படவுள்ளது. 800 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவார்கள். அத்துடன் நுகர்வோர் அதிகாரிகளும், போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் கடமையாற்றவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 11.03.2017 அன்று அதிகாலை 04.00 மணியில் இருந்து மாலை 2.00 மணி வரையும் கடல்வழியிலான பயணத்தை மேற்கொள்ளமுடியும். அன்று மாலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி திருவிழா மறுநாள் 12.03.2017 அன்று காலை 09 மணிக்கு திருச்சுருவ பவனியுடன் புனித அந்தோனியாருக்கு கூட்டுத்திருப்பலியும் ஆராதணையும் நடைபெறும். அன்று நண்பகல் 12 மணியளவில் அனைத்தும் நிறைவு செய்யப்படும்.
வடதாரகை படகுடன், சிறிய படகுகள் 15உம் இதன்போது சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பக்தர்கள் நலன்களுக்கான யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவானுக்கு 72 ரூபா போக்குவரத்துக் கட்டணமாகவும், படகுகள் மூலம் குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு 150 ரூபாவும் அறவிடப்படுகின்றது. மொத்தமாக 300 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.