மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலாமானார்.
இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது.
1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார்.
பின்னர், 2015ம் ஆண்டு அக் கட்சியில் இருந்து விலகி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார்.
எதுஎவ்வாறு இருப்பினும், மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுனராக அறியப்பட்ட ரோஹன விஜயவீரவுக்கு பின்னர், அக் கட்சியின் தலைமை பீடத்தில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோமவன்ச என்பது சுட்டிக்காட்டத்தக்கது.