சோனாக்க்ஷி சின்ஹாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் இளவட்ட ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது உங்களுடன் நடிப்பது எனக்கு பதட்டமாக உள்ளது என்று சோனாக்க்ஷி சொன்னபோது, உன்னை விட எனக்குத்தான் அதிக பதட்டமாக உள்ளது என்றாராம் ரஜினி.

Sonakshi-Sinha

காரணம், நீ எனது நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள். அந்த வகையில் எனக்கும் மகள் போன்றவள். அதனால் நான்தான் மனதளவில் பதட்டத்துடன் இருக்கிறேன் என்று தனது நிலையை கூறியிருக்கிறார்.

அதையடுத்து,சோனாக்ஷியை தனது மகள் இடத்தில் வைத்து பேசி வந்த ரஜினி, மதிய இடைவேளை நேரங்களில் ஓய்வாக பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு தான் இமயமலை சென்று வந்ததில் இருந்து ஏராளமான ஆன்மீக கதைகளை சொல்லி வந்திருக்கிறார்.

அதோடு, தனக்குத் தெரிந்த சில முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக புத்தகங்களையும் சோனாக்ஷிக்கு பரிசாக கொடுத்திருக்கிறாராம் ரஜினி.

அதனால் இப்போது தனக்கு கிடைக்கும் நேரங்களை கொஞ்சமும் வீணடிக்காமல் அந்த புத்தகங்களை படிப்பதிலேயே செலவிட்டு வரும் சோனாக்ஷி, ரஜினியுடன் நடித்தபோது ஒரு மகானுடன் நடிப்பது போன்று நான் உணர்ந்தேன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தவர், இப்போது அந்த ஆன்மீக புத்தகங்களை படிப்பதால் எனது மனம் இன்னும் தூய்மை அடைந்திருக்கிறது.

உலக வாழ்க்கை என்னவென்று தெரிந்திருக்கிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நானும் பக்குவப்பட்ட பெண்ணாக மாறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Posts