சோதனை என்ற பெயாில் அலைக்கழிக்கப்படும் மக்கள்!!

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக பேருந்துகள் தொடக்கம் சகல வாகனங்களும் மக்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். ஓமந்தை, புளியங்குளம் பகுதிகளில் கடந்த இரு நாட்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது பெருமளவு கஞ்சுா போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (ஏ-9) வீதியில் பல இடங்களில் சோதனை சாவடிகள் உருவாக்கப் பட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

யாழிலிருந்து வவுனியா நோக்கி செல்கின்ற பேருந்துகள் அனைத்தையும் புத்தூர் நாகதம்பிரான் ஆலயம் செல்லும் சந்தியிலும், ஓமந்தையிலும் நிறுத்தி இலங்கை இராணுவம் பரிசோதனை செய்கின்றது.

வேலைக்கு செல்லும் அரச, அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், வைத்தியசாலை செல்வோர், வயது முதிர்ந்தோர் அனைவரும் இறக்கி விடப்பட்டு அனைத்து உடமைகளும் பரிசோதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

Related Posts