சோதனைகளை கடக்க வேண்டும் அப்போது தான் சாதனைகள் படைக்க முடியும் – அனிருத்

அனிருத் சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே விஜய்-அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

ஆனால், சமீபத்தில் இவர் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியது இவருடைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் பல படங்களில் இருந்து அனிருத் வெளியேற்றப்பட்டார்.

நேற்று நடந்த விருது விழா ஒன்றில் மாரி படத்திற்காக அனிருத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.

இதில் பேசிய இவர் ‘இந்த மேடையில் நிறைய பேச வேண்டும், சில நாட்களாகவே பல சோதனைகள் வந்து விட்டது, ஆனால், அந்த சோதனைகளை கடக்க வேண்டும், அப்போது தான் சாதனைகள் படைக்க முடியும்’ என கூறியுள்ளார்.

Related Posts