சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

tsunami-warningபசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தினால் எவ்விதமான சேதங்களும் இதுவரையிலும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts