Ad Widget

சொந்த நிலத்தைப் பார்வையிடச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து சென்றிருந்தனர்.

vasavilan

ஆனால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட குறிப்பிட்ட பிரதேசத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான பிரதேசம் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரால் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நேற்றய தினம் தோலகட்டி, வடமுனை, தென்முனை மற்றும் ஒட்டகப்புலம் எனும் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ஒட்டகப்புலத்தில் ஒரு பகுதியே மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது, ஏனைய பிரதேசம் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் தமது சொந்த நிலங்களை 25 வருடத்திற்கு பின்னர் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேவேளை நேற்றய தினம் மக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related Posts