சொந்த கதையில் நடிக்கும் மாதவன்!

மலையாளத்தில் மார்ட்டின் பிராக்கட் இயக்கத்தில் துல்கர்சல்மான்-பார்வதி நடித்து வெளியான படம் சார்லி. அதற்கு முன்பு துல்கர்சல்மான் நடித்து வெளியான படங்களில் வசூல் சாதனைகளை முறியடித்த இந்த படம் அவரையும் நடிப்புரீதியாக அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அப்படி கேரள ரசிகர் களின் வரவேற்பினை பெற்ற சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அந்த படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார் என்றும் செய்திகள் பரவி வந்தன.

mathavan

ஆனால் இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் மாதவன். அதோடு, நல்ல படங்கள், மனதை பாதித்த படங்களின் ரீமேக்கில் நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. மேலும் சார்லி படம் ரொம்ப நல்ல கதை. ஆனால் அந்த படத்தில் நடிப்பது சம்பந்தமாக யாரும் என்னை அணுகவில்லை. மீடியாக்களில் இந்த செய்தியை யார் கொளுத்திப்போட்டார்கள் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ள மாதவன், தான் தற்போது கதை எழுதி, தயாரித்து, நடிக்கும் சால கடூஸ் இந்தி படத்தில் பிசியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts