ஏன் யாருக்கும் இப்படியொரு ஐடியா தோன்றவில்லை? அருகருகே இருக்கும் இந்தியாவும், சைனாவும் இணைந்து ஏன் படங்கள் தயாரிக்கக் கூடாது? சைனாவின் மார்ஷியல் ஆர்ட்டும், இந்தியாவின் கலர்ஃபுல் நடனங்களும் இணைந்தால் அட்டகாசமான ஃப்ளேவரில் புதுவகை சினிமா கிடைக்குமே.
இந்தியா, சைனா எல்லையில் பதட்டம் கூடியிருக்கும் இந்தவேளையில் கலையுலகினர் கைகோர்க்கயிருக்கிறார்கள். லைட்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் என்ற சர்வதேச தயாரிப்பு நிறுவனம்தான் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
சைனாவின் சண்டைக் கலையையும், இந்தி சினிமாவில் பிரதானமாக இருக்கும் நடனங்களையும் இடம்பெறச் செய்வது போல் ஒரு ஸ்கிரிப்டை இதற்காக தயாரித்துள்ளனர். இந்தி சினிமாவிலிருந்து அமிதாப்பச்சன், அபைய் தியோல் நடிப்பார்கள் என தெரிகிறது. படத்தை இயக்கும் பொறுப்பு Corey Yeun-க்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜெட்லீ நடித்த ரோமியோ மஸ்ட் டை படத்தை இயக்கியவர்.
இந்த இந்தோ சைனா கூட்டுத் தயாரிப்பை கடைசி ரசிகன் வரை எடுத்துச் செல்லும் முயற்சியாக ஜாக்கிசானையும் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் உள்ளது.
படத்துக்கு கோல்ட் ஸ்ட்ரக் (Gold Struck) என்று பெயர் வைத்துள்ளனர்.