சைட்டம் போதனா வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்! -ராஜித

தனியார் மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் சைட்டம் போதனா வைத்தியசாலை, விரைவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் சகல தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சைட்டம் பிரச்சினை தொடர்பில் தெளிவான தீர்மானத்துக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts