சைட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் தம்மை பதிவுசெய்துகொள்வதற்கு தகுதியுடையவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்களது பெற்றோர் மற்றும் கல்லூரியின் அதிகாரிகள் இன்றிரவு சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts