அறிமுக இயக்குனர் ஆஷிப் குரைஷியின் இயக்கத்தில் உருவாகும் படம், உத்தரவு மகாராஜா. இந்தப் படத்தில் ஹீரோவாக உதயா நடிக்கிறார்.
சைக்கோ த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் மகாராஜாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்து கடைசியில் எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்திருக்கிறார்கள். மகாராஜா கதாபாத்திரத்துக்கு அவரே சரியாக இருப்பார் என்பது இயக்குனரின் அசையாத நம்பிக்கை.
எஸ்.ஜே.சூர்யா இன்னும் மகாராஜாவாவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.