சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.கிரிதரன் புதன்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் தற்போது மந்திகை வைத்தியசாலையின் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்திகை வைத்தியசாலை பணியாளரான அவர் கிரி என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்திருந்தார்.யுத்த நெருக்கடியான காலப்பகுதியில் அவரது சேவை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்திருந்தது.

இதனிடையே அவரது வெற்றியை பொறுக்கமுடியாத சில சக்திகளே தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பளை பகுதியிலும் முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காயமடைந்த குறித்த வேட்பாளர் பளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts