கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பவனியில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சைக்கிள் ஓடுவதற்கு வரும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அழைத்தார். எனினும் அதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
வடமாகாணத்தில் இருதய சத்திரசிகிச்சைக்கான துறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நிதி திரட்டும் பொருட்டு, யாழ் கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து சைக்கிள் பவனியொன்று வெள்ளிக்கிழமை (15) காலை ஆரம்பமாகியது. இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சி.வி.க்கு சைக்கிளோட அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ், ‘உங்களுக்கு சைக்கிள் ஓட்ட விருப்பம் இல்லாவிட்டால், வாருங்கள் நான் உங்களை எனது சைக்கிளில் ஏற்றிச் செல்கின்றேன். நீங்கள் முன்னுக்கும் ஏறலாம் பின்னுக்கும் ஏறலாம் எனவும் கூறினார். அதற்கு முதலமைச்சர், புன்னகையைப் பதிலாக வழங்கினார்.
தொடர்புடைய செய்தி