சேந்தாங்குளம் ஆலயத்திற்கு சொந்தமான 36 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை விடுவித்தமைக்காக கடற்படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக அருட்தந்தை மேலும் கூறினார்.

Related Posts