சேதம், இழப்பு இன்றி கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றி- அரசாங்கம்

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும் என வௌிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிஸ் – 13 எனும் கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவகையிலும், இரத்தம் சிந்தாமலும், கொள்ளையர்களுக்கு கப்பம் வழங்காமலும் கப்பலில் இருந்த இலங்கை அதிகாரிகளை மீட்க முடிந்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts