செல்வராகவன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாம்!

ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ரெஜினா, நந்திதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இறைவி படத்திற்கு பிறகு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தன் மனசுக்கு பிடித்தமான படமாக கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து விட்ட இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில், அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த படத்தை தயாரிக்கயிருப்பதாக கூறப்பட்ட வந்த நடிகர் பிரபு, செல்வராகவன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டது. அதனால் இந்த படம் கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.

ஆக, பைரவா படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கயிருக்கும் விஜய், அந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

Related Posts