‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன். நீண்ட நாள் இடைவேளைக்குப் பின், செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை குளோ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் தயாரிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்புக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி இருவரும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபுவும் முன்னாள் கதாநாயகனான சுரேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
செல்வராகவனின் வெற்றிப் படங்களில் கூட்டணியாக இருந்த யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ‘மதராசப்பட்டினம்’ புகழ் செல்வகுமார் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.