செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.எதிர்வரும் 3 ஆம் திகதி பூங்காவனமும் 4 ஆம் திகதி கைலாயவாகனமும் 7 ஆம் திகதி சப்பறமும் அதனைத் தொடர்ந்து 8 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
உற்சவ காலங்களில் பெறுமதிமிக்க ஆபரணங்கள், உடைமைகள் தொடர்பில் அடியார்களை விழிப்பாக இருக்கும் படியும் உற்சவ காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குடி தண்ணீரை வீண்விரயம் செய்வதை தவிர்க்குமாறும் வாகனம் நிறுத்தும்போது விதி முறைகளைப் பின்பற்றுமாறும் ஆலய பரிபாலனசபையினர் அடியார்களை அறிவுறுத்தியுள்ளனர்.
கோவிலுக்குள் இடம்பெறும் திருட்டுக்களைக் கண்டுபிடிக்க சி.சி.ரி.வி.கமராக்கள் பொருத்தப்படும் என கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ள போதும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து வருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சுற்றாடலில் பச்சை குத்துவது, மதுபாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. உணவு உட்பட பொருள்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு விலையைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.